யவீரு (JAIRUS) ஆகஸ்டு 3, 1954 லாஸ் ஏஞ்சலஸ், கலிபோர்னியா, அமெரிக்கா 1. பிசாசினுடைய முயற்சிகள், அவன் தன்னுடைய பலத்தைக் காட்டிலும் ஏறக்குறைய ஐந்து மடங்கு பலத்தை உடையவனாயிருக்கிறான். அது உண்மை. அதைக் குறித்து என்ன, அந்த மனிதனால் பிசாசுக்கு (தன்னை) அவ்வளவாக சமர்ப்பிக்கக் கூடுமானால், அவன் (பிசாசு... (பலத்தைக்) கொடுப்பான். அவனுடைய பலத்தைப் போல, ஐந்து மடங்கு பலத்தினை பிசாசினால் அவனுக்குக் கொடுக்கக் கூடுமானால், தேவனுக்குத் (தன்னை) சமர்ப்பிக்கும் ஒரு மனிதன் எப்படிப்பட்டவனாய் இருப்பான்? அவன் எத்தனை மடங்கு வல்லமையைக் கொண்டிருக்க முடியும்? அந்தவிதமாகத்தான் நாற்காலியில் இருக்கும் முடவர்கள், தேவனுடைய அபிஷேகத்தின் கீழாக, எழுந்து நடக்க முடிகிறது. அதுதான் காரணம்; அவர்கள் பரிசுத்த ஆவியானவருக்கு முழுவதுமாக ஒப்புவிக்கிறார்கள், அவர்கள் தங்களுடைய பலத்தைக் கொண்டு நடப்பதில்லை, ஆனால் பரிசுத்த ஆவியானவரின் வல்லமையைக் கொண்டே நடக்கிறார்கள். 2. இயேசு தம்முடைய சீஷர்களை தூரமாய் அனுப்பி விட்டு, அவர்கள் கடலைக் கடந்து போகையில், அவர்களை இரகசியமாய் கவனிக்கும்படி, அவர் அந்த மலையின் மேல் ஏறிப் போனார். நான் அதைக் குறித்து அநேக நேரங்களில் சிந்தித்துப் பார்ப்பதுண்டு, அந்த சீஷர்கள் எவ்வாறு இருந்தனர்....என்பதை நான் எண்ணிப் பார்க்கிறேன். அவர்கள் கீழே சென்று, ஒரு படகை ஆயத்தம் செய்ய நினைத்தார்கள். ஆனால் அந்தப் படகை ஆயத்தம் பண்ணுவதற்குப் பதிலாக, அவர்கள் அப்படியே படகில் ஏறி, போகத் துவங்கி விட்டார்கள். அவர்கள், ஓ, நல்லது, அது சரியாக இருக்கும். நாம் தொடர்ந்து போகலாம்” என்று நினைத்தார்கள். அவர்கள் அந்தப் படகையே நம்பியிருந்தார்கள். 3. நாம் அநேக நேரங்களில், இயேசு படகில் இல்லாமலேயே தூரமாக போகவில்லையோ என்று வியப்படைகிறேன். நாம், "நல்லது, நாங்கள் இந்த சபையைச் சேர்ந்தவர்கள், அது சரி அல்லவா?” என்று கூறலாம். அது போதுமானதல்ல. இல்லை, அது திருப்திகரமானதாக இருக்காது. நாம் இயேசுவை நம்மோடு கொண்டிருந்தாக வேண்டும். நம்முடைய திட்டம் என்னவாக இருந்தாலும் அது ஒரு பொருட்டல்ல, நாம் அவரைக் கொண்டிருந்தே ஆக வேண்டும். அவரே மற்ற எதைக் காட்டிலும் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டியவர் ஆவார். மற்ற எதைக்குறித்து சிந்திப்பதைக் காட்டிலும் அதிகமாக சிந்திக்கப்பட வேண்டியவர் அவர் தான், ஜீவனின் முக்கிய நபர் அவர் தான். இயேசு கிறிஸ்துவின் மூலமாகவே அன்றி, வேறெந்த வழியிலும் எந்த ஜீவனும் வர முடியாது. இயேசு கிறிஸ்துவின் வழியாகவே அன்றி, வேறெந்த வழியிலும் எந்த ஒத்தாசையும் வர முடியாது. 4. ஆனால் அந்தச் சிறிய படகு கடலுக்குள் போய்க் கொண்டிருப்பதை நான் காண்கையில், நீங்கள் இதைக் கவனிக்க விரும்புகிறேன். இயேசு நின்று பார்த்து, அவர்கள் அவர் இல்லாமல் தூரமாய் சென்றதைக் கண்டு கொண்டார், அவர்கள் அப்படி போன போதிலும், அவர் அவர்களைக் குறித்து கரிசனை (அக்கறை) உள்ளவராயிருந்தார். அவர் அந்த மலையின் உச்சியில் ஏறிச் சென்று, அவர்கள் கஷ்டப்பட்டு தொடர்ந்து போகையில், அவர்களைக் கவனித்தார். ஓ, என்னே. அது நீங்களோ, அல்லது நானோ, நம்முடைய நண்பர்களில் ஒருவரோ அவ்விதமாக நமக்குச் செய்திருப்பார்களானால், நாம் அந்த நண்பனுடைய நட்பை முறித்திருப்போம், ஆனால் இயேசு அப்படியில்லை. நீங்கள் என்ன செய்திருந்தாலும் பரவாயில்லை, நீங்கள் அப்படியே அதை அறிக்கை செய்வீர்களானால், அவர் அதை மறந்து விட ஆயத்தமாயிருக்கிறார். 5. அநேக நேரங்களில், நாம் தூரமாய் போய் விடுவதைக் குறித்து எண்ணிப் பார்க்கிறேன். நான் அந்த மகத்தானவரைக் குறித்து எண்ணிப் பார்க்கிறேன், அவர் அந்த மலையின் மேல் ஏற மாத்திரம் செய்யவில்லை, ஆனால் அவர் மேலே கொல்கதாவுக்கு, அந்த மகிமையின் பாதுகாப்பு அரண்களுக்கு ஏறிச்சென்று, இன்றிரவு அவருடைய மகத்துவத்தில் வீற்றிருந்து, நாம் காலத்தின் காற்றுகளினால், மேலும் கீழுமாக ஆடி அசைந்து, அவ்வாறு கடலில் இருக்கையில், எளிதில் உடைந்து போகிற நம்முடைய இந்தச் சிறு கப்பல்களில் இருக்கும் நம்மைக் கவனித்துக் கொண்டேயிருக்கிறார். 6. ஆனால் கடலுக்கு மறுகரையில் ஒரு சிறிய மனிதன் இருந்தான், நான் எப்போதுமே அவனை மிகவுமாக பாராட்டுவதுண்டு, நான் அவனைக் குறித்து சற்றே கொஞ்சம் எண்ணிப் பார்த்தேன். நான் இதைச் செய்ய விரும்புகிறேன், நான் மகிமைக்கு போய் சேரும் போது, அவன் ஏன் ஆரம்பத்திலேயே வெளியே வந்து, தன்னுடைய விசுவாசத்தை அறிக்கையிடவில்லை என்று நான் அவனிடம் கேட்க விரும்புகிறேன். அவனுடைய பெயர் தான் யவீரு. அவன் ஒரு ஆசாரியனாக, அல்லது அங்கிருந்த ஒரு மகத்தான சபையின் ஒரு-ஒரு மேய்ப்பனாக இருந்தான், நாம் அதை அவ்வாறு அழைப்போம். இன்றுள்ள அநேக ஜனங்களைப் போல, யவீரும் கர்த்தராகிய இயேசுவை விசுவாசித்தான், ஆனால் அவனுடைய-அவனுடைய ஸ்தாபனமானது அவருடைய வல்லமையான கிரியைகளுக்கு விரோதமாய் இருந்தது. இன்றிரவும் நாம் எத்தனை யவீருக்களை லாஸ் ஏஞ்சலிஸில் பெற்றிருக்கிறோம்? அதே காரியம் தான். அவன் இயேசுவை விசுவாசித்தான். நான் அவனை ஒரு எல்லைக்கோட்டு விசுவாசி என்று அழைக்கிறேன். 7. நாம் இன்றிரவும் எல்லாவிடங்களிலும் அநேக எல்லைக்கோட்டு விசுவாசிகளைப் பெற்றிருக்கிறோம். விசுவாசிக்க அவர்களுக்கு விருப்பமுண்டு, ஆனால் சமுதாய கௌரவத்தின் நிமித்தமாகவும் மற்றவைகளின் நிமித்தமாகவும் அவர்களால் உண்மையாகவே அதைச் செய்ய முடிவதில்லை. அவர்களால் (தங்களைக்) கட்டவிழ்த்துக் கொண்டு, விட்டுக்கொடுத்து, "இயேசு கிறிஸ்து இன்னும் பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தைக் அருளுகிறார் என்று விசுவாசிக்கிறேன்; சீஷர்களின் நாட்களில் உலகத்தை அசைத்த அந்த வல்லமை அப்போதிருந்தது போலவே இன்றும் மாறாமல் உள்ளது” என்று கூற முடிவதில்லை. 8. அது மாறாமல் இருக்கிறது என்று நான் விசுவாசிக்கிறேன். அது அவ்வாறு இருக்கிறது என்று எனக்குத் தெரியும். இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராய் இருக்கிறார் என்று நான் அறிவேன். அவருடைய சபையானது (தங்களை) விடுவித்துக் கொண்டு, தேவனைத் தங்கள் இருதயத்தில் வரும்படியாக அனுமதிக்கும் போது, நீங்கள் அதேவிதமாக வல்லமை வெளிப்படுவதையும், அதேவிதமாக வல்லமை தெளிவுபடுத்திக் காண்பிக்கப்படுவதையும் காண்பீர்கள்; அப்போது நாம் ஒரு அசைக்கப்படுகிற எழுப்புதலைக் காண்போம், லாஸ் ஏஞ்சலஸ் அசைக்கப்படுவது மட்டுமல்ல, ஆனால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் வருகைக்கு முன்பாக அது உலகத்தையே அசைக்கும். அது உண்மை. 9. சிறிய யவீரு, அவன்-அவன் அங்கேயிருப்பதை நான் காண்கிறேன். ஆசாரியர்கள் எல்லாரும் ஒன்று கூடி, அவர்கள், "இப்பொழுது, இதோ பாருங்கள், வழக்கமாக நடைபெற்று வருகிற இந்த எழுப்புதல்களோடு நமக்கு எந்த சம்பந்தமும் கிடையாது. நமக்கு அதனோடு எந்த சம்பந்தமும் இருக்க முடியாது. இப்பொழுது, நினைவிருக்கட்டும், அது நம்முடைய...யாராவது அதனோடு தொடர்பு வைத்திருந்தால், நாம் அவர்களை உதைத்து வெளியே தள்ளி விடுவோம்” என்று கூறுவதை என்னால் கேட்க முடிகிறது. நல்லது, இப்பொழுது யவீருக்கு ஒரு அருமையான சிறிய சபை இருந்தது, எனவே ஒருக்கால், அவனால் அப்படிப்பட்ட ஒரு கூட்டத்தினரோடு தன்னை இணைத்துக் கொள்ள முடியாமல் இருந்திருக்கலாம். ஆனால் அவன் தன்னுடைய இருதயத்தில் உண்மையாகவே கர்த்தராகிய இயேசுவை விசுவாசித்தான். 10. இந்நிலையில், ஒரு நாள், அவனுடைய சிறிய மகள் வியாதிப்பட்டாள். உங்களுக்கு விருப்பமில்லை என்றால், சில வேளைகளில், உங்களை விசுவாசிக்க வைக்கும்படியான ஒரு வழியை தேவன் உடையவராயிருக்கிறார் என்பது உங்களுக்குத் தெரியும். ஆம், ஐயா, அவரால் கூடும்... அவர்-அவர் அதைச் செய்கிறார்... விளங்கிக் கொள்ள முடியாத வழிகளிலும், அற்புதமான விதத்திலும் தேவன் கிரியை செய்கிறார். எனவே இந்தச் சிறிய மகள் வியாதிப்பட்டாள். இந்நிலையில், ஒருக்கால் அவன் செய்த முதலாவது காரியம் என்னவெனில், வேறெந்த வேளையிலும் செய்யப்படுவது போல, அவன் மருத்துவரை அழைத்தான். மருத்துவர், நல்லது, ஒருக்கால் அவளைப் பிழைக்க வைக்க என்னால் முடியும்... அவளை சாகாமல் பிழைக்க வைக்க என்னால் கூடும்” என்றார், (என்னை மன்னியுங்கள்.) "ஒன்றிரண்டு நாட்களில் அவளைப் பிழைக்க வைத்து விடுவேன்” என்றார். எனவே, அவர் எல்லா மருந்துகளையும் அவளுக்குக் கொடுக்கத் துவங்கினார், ஆனால் அவளோ எல்லா நேரமும் மோசமாகி மோசமாகிக் கொண்டே இருந்தாள். சற்று கழிந்து, அந்தப் பெரிய நடுஇரவு வேளை வந்தது. மருத்துவர் யவீருவை கதவுக்கு வெளியே அழைத்து, "சங்கை யவீரு அவர்களே, ஐயா, நான் இதை உம்மிடம் கூறுவதற்கு வருந்துகிறேன், உம்முடைய பிள்ளை கொஞ்ச நேரமே உயிர்வாழ்வாள். அவள் மரித்துக் கொண்டிருக்கிறாள்" என்று கூறுகிறார். ஓ, அந்தப் பரிதாபமான, சிறிய மனிதனுடைய உணர்ச்சியை என்னால் கற்பனை செய்து பார்க்க முடிகிறது. முதலாவதாக, அவனுடைய மனதில் என்ன தோன்றியிருக்கும் என்று நினைக்கிறீர்கள்? அப்போது, இயேசுவைப் பற்றிய எண்ணம் தான் அவனுடைய மனதில் வந்தது. அது உண்மை. 11. உங்களுக்கு பிரச்சனைகள் இருந்தும், நீங்கள் அவரை விரும்புவதில்லை என்று உங்களுக்குத் தெரியும். உண்மையாகவே அவர் உங்களுக்குத் தேவைப்படும் ஒரு நேரம் வரும். நீங்கள் மரிக்கும் முன்பே அவரைக் கண்டு கொள்வீர்கள் என்று நம்புகிறேன், ஆனால் நீங்கள் அவ்வாறு செய்யாவிடில், நீங்கள் உங்கள் மரணப் படுக்கையில் இருக்கும் போது, அந்த இருளான வேளையினூடாக உங்களைக் கொண்டு செல்லும் காரியம் இந்த பழமை நாகரீகமான மார்க்கம் தான் என்று நிச்சயமாகவே அறிந்து கொள்வீர்கள். இப்பொழுது அது மதவெறித்தனம் என்றும், தங்களுடைய தலையில் கொஞ்சம் பித்து பிடித்த ஜனங்கள் என்றும் நீங்கள் நினைக்கலாம், ஆனால் மரண தூதன் கதவைத் தட்டுவது வரையில் காத்திருங்கள். (சகோதரன் பிரன்ஹாம் பிரசங்க பீடத்தைத் தட்டுகிறார் - ஆசிரியர்.) அப்போது அந்த எல்லா குழப்பமும், எல்லா பின்வாங்கிப் போன நிலையும், எல்லா குளிர்ந்து போன நிலையும் உங்களை விட்டு நீங்கிப் போய் விடும் என்று நான் உங்களுக்குக் கூறுகிறேன், அல்லது, எப்படியும் அது நீங்கிப் போக வேண்டும் என்று நீங்கள் விரும்புவீர்கள். ஆமென். 12. கவனியுங்கள், இந்தச் சிறு மனிதனுடைய இருதயம் வேகமாக அடிக்கத் தொடங்கி, "மருத்துவரே, என் மகளுக்கு உம்மால் எதையுமே செய்ய முடியாது என்றா நினைக்கிறீர்கள்?” என்று கூறுவதை என்னால் காண முடிகிறது. 13. "இல்லை. எல்லா மருந்துகளும் பயனற்று போய் விட்டன, இப்பொழுது, சிறுமி கைவிடப்பட்ட நிலையில் இருக்கிறாள், அவளுடைய இருதயம் மெதுவாகவே அடித்துக் கொண்டிருக்கிறது, அவள் இப்பொழுது மரித்துக் கொண்டிருக்கிறாள்." 14. ஓ, அவன் உள்ளே போய், தன்னுடைய மனைவியைக் கூப்பிட்டு, அன்பே, நான்-நான்-நான் ஒரு காரியத்தை உன்னிடம் கூற விரும்புகிறேன், அது உனக்குத் தெரியும். அந்த சுகமளிக்கும் கூட்டங்கள் இங்கே சுற்றிலும் நடந்து கொண்டிருக்கின்றன என்று உனக்குத் தெரியுமா? நமது சபை அதற்கு விரோதமாய் இருக்கிறது என்று நாம் அறிவோம், ஆனால், நாம் அந்த நாசரேத்தூர் இயேசுவைப் பற்றிப் பிடித்துக் கொள்ளக் கூடுமானால், ஒருவேளை அவரால் அவளுக்கு உதவி செய்ய முடியும் என்று நான்-நான்-நான் ஒருவிதமாக உணருகிறேன் என்று உனக்குத் தெரியும்” என்று கூறுவதை என்னால் காண முடிகிறது. 15. ஏன், அவள், “இப்பொழுது-இப்பொழுது, இதோ பாரும் அன்பே, இப்பொழுது, ஜனங்கள் மத்தியில் உமக்கிருக்கிற சமூக அந்தஸ்தை இழந்து போக விரும்ப வேண்டாம். அவள் மரித்துக் கொண்டிருக்கிறாள் என்று மருத்துவர் கூறினால், அதோடு அது முடிவு பெறுகிறது” என்று கூறுவதை என்னால் கேட்க முடிகிறது. 16. ஆனால் யவீருடைய இருதயத்திலோ, அது முடிந்து போகவில்லை. அவன் செயலில் ஈடுபட்டிருக்கும் இயேசு கிறிஸ்துவைக் கண்டிருந்தான், செயல்பாட்டில் இருக்கிற இயேசு கிறிஸ்துவை எப்பொழுதாவது கண்ட எந்த மனிதனும் மீண்டும் ஒருபோதும் அதேவிதமாக இருக்க முடியாது. அது உண்மை. அங்கே ஏதோவொன்று அசைந்து கொண்டிருந்தது என்றும், அங்கே வித்தியாசமான ஏதோவொன்று இருப்பதையும் அவன் அறிந்து கொள்ள வேண்டியதாயிருந்தது. யவீருக்கு அது முடிந்து போவில்லை, இல்லை, ஐயா. அப்பொழுதும், அவன் உள்ளே சென்று, மதகுருமார்கள் அணியும் தன்னுடைய சிறு தொப்பியை எடுத்து அதை அணிந்து கொண்டும், தன்னுடைய சிறு கோட்டை அணிந்து கொண்டும், வெளியே நழுவிச் செல்வதை என்னால் காண முடிகிறது. இயேசு வந்து கொண்டிருந்தார் என்று யாரோ யாரோ ஒருவர் ஒருவர் அவனிடம் நிச்சயமாக கூறியிருக்க வேண்டும். அது - அது இன்னும் இன்றிரவில் பிரசங்கம் பண்ணுவதற்கு நல்லதொரு செய்தியாக உள்ளது என்று உங்களுக்குத் தெரியும். நீங்கள் அவ்வாறு நினைக்கவில்லையா? அவர்கள், "ஆ, அவர் அங்கே அந்த வழியைக் கடந்து வந்து கொண்டிருக்கிறார்” என்று கூறுவது எனக்குக் கேட்கிறது. 17. யவீரு, "இப்பொழுது, நான் நழுவிச் செல்வேன்” என்று கூறுவதை என்னால் காண முடிகிறது. 18. அவருடைய சபையிலுள்ள சிலர், "வாலிபரே, நீர் எங்கே போய்க் கொண்டிருக்கிறீர்?” என்று கேட்பதை என்னால் கேட்க முடிகிறது. 19. “நல்லது, நாங்கள்... க்கு போய்க் கொண்டிருக்கிறோம். நான்... நல்லது... சும்மா நடக்கலாமே என்று நான்-நான் நினைத்தேன்" என்றான். 20. “அது என்னவென்று எனக்குத் தெரியும், நான் அந்த உரையாடலைக் கேட்டேன். அங்கே வந்து கொண்டிருக்கிற அந்த தெய்வீக சுகமளிப்பவனின் பின்னால் நீ போய்க் கொண்டிருக்கிறாய். இப்பொழுது, நாங்கள் டீக்கன்கள் என்பது நினைவிருக்கட்டும். நீ அதைக் கொண்டிருப்பாயானால், அடுத்த பொது ஆலோசனை குழு”, அல்லது- அல்லது அது என்னவாக இருந்தாலும் அது, "நாங்கள்-நாங்கள் உன்னை உதைத்து வெளியே தள்ளப் போகிறோம்" என்றனர். நான் அவ்வாறு கூறக் கருதவில்லை, ஏனென்றால் அங்கே ஒரு பொது... நான் அவ்விதமாக அதைக் கூறக் கருதவில்லை; ஆனால் எப்படியும். "சரி, நாங்கள் அடுத்த முறை சபைக்குப் போகும் போது உன்னை (வெளியே தள்ளப்) போகிறோம்" என்றனர். அது என்னவாயிருந்தாலும், "ஆலோசனைக் கூட்டமோ,” அல்லது அது என்னவாயிருக்கிறதோ அது. நீ அந்தப் பேர்வழியோடு உன்னை முட்டாளாக்கிக் கொண்டால், நாங்கள் உன்னை வெளியே தள்ளிவிடப் போகிறோம், பார், நாங்கள் உன்னோடு எந்த சம்பந்தமும் வைத்துக் கொள்ள மாட்டோம்" என்றனர். ஆனால் அவன் சிறிது நேரம் நடுங்கியவாறு நின்று அவனுடைய கரத்தைக் குலுக்கி விட்டு, வியந்து கொண்டிருப்பதை என்னால் காண முடிகிறது. ஆனால், கவனியுங்கள், அவனுக்கு ஒரு தேவை இருந்தது. அவனுக்கிருந்த ஒரே நம்பிக்கை இயேசு கிறிஸ்துவில் தான் இருந்தது. ஆமென். அவனால் செய்ய முடிந்த ஒரே காரியம் என்னவென்றால், மிக வேகமாக இயேசுவிடம் செல்வது தான், அல்லது அவனுடைய மகள் மரித்து விடப் போகிறாள். 21. எனவே, அவன் சாலையில் கீழ்நோக்கி நழுவிச் செல்வதை என்னால் காண முடிகிறது, அவனுடைய சபையார், “அதோ அவன் போகிறான். அதோ பாருங்கள், அவமானம், இப்பொழுது நம்முடைய சபை எங்கே போய்க் கொண்டிருக்கிறது என்று பாருங்கள். இப்பொழுது அவர்கள் அந்த மதவெறித்தனத்தோடு ஒன்றாகச் சேர்ந்திருக்கும்படி போய்க் கொண்டிருக்கிறார்களே" என்கின்றனர். ஆனால் இந்த மனிதனோ, அந்த மேய்ப்பராகிய சகோதரனோ தேவனை சந்திக்க விரும்பினான். தாம் எதைக் குறித்துப் பேசிக் கொண்டிருக்கிறார் என்பதை அறிந்திருந்த யாரோ ஒருவரை அவன்-அவன் பற்றிப்பிடித்துக் கொள்ள விரும்பினான். ஆமாம். அவன் கற்றுத் தேர்ந்திருந்த எல்லாவேதசாஸ்திரத்தையும் மற்ற யாவற் றையுமேஅவன் தூர எறிந்து விட்டான். அப்போது அது அவனுக்கு ஒன்றுமே இல்லாதிருந்தது, அவனுடைய மகளோ மரித்துக் கொண்டிருந்தாள். 22. ஓ, சில சமயங்களில், கிறிஸ்தவ சபையின் செழிப்பிற்கு மேலாக, யார் எஜமானாக இருக்கிறார் என்று எப்பொழுதாவது நம்மை அறியச் செய்து, நம்மை புத்தி தெளிவுக்கு கொண்டு வர தேவன் எவ்வளவு அற்புதமான ஒரு வழியைக் கொண்டிருக்கிறார். அது உண்மை. 23. அவன் கீழே நழுவிச் செல்வதை என்னால் காண முடிகிறது, இயேசு மேலே ஏறி, கடற்கரை ஓரமாக இருந்த சிறு புதருக்கு வெளியே வருவதையும் என்னால் காண முடிகிறது, அவருடைய சிறிய படகு உள்ளே தள்ளப்படுவதை என்னால் காண முடிகிறது. 24. நீங்கள் அறிகிற முதலாவது காரியம் என்னவென்றால், அங்கே மேலே ஒரு சிறிய பெண்மணி இருந்தாள், அவள் ஒருக்கால் அநேகமாக தன்னுடைய பின்னல் வேலையையோ (knitting) அல்லது ஏதோவொன்றைச் செய்து கொண்டிருந்தாள்; அவள் பண்ணையையே அடமானம் வைத்து விட்டிருந்தாள், அவளுக்கிருந்த சகலத்தையும் மருத்துவர்கள் எடுத்து விட்டிருந்தனர், எதுவுமே அவளுடைய அவளுடைய உதிரப்போக்கை நிறுத்த முடியவில்லை. அவள், "ஓ, அதோ அவர் இருக்கிறார். இப்பொழுது, தெய்வீக சுகமளித்தலைப் பிரசங்கிக்கிற அந்த மனிதர் அவர் தான். இப்பொழுது, அவர்கள் அவரைக் குறித்து என்ன கூறினாலும் எனக்குக் கவலையில்லை, நான் அவரை விசுவாசிக்கிறேன், நான் மாத்திரம் அவருடைய வஸ்திரத்தைத் தொட முடியுமானால், நான் சுகமாகி விடுவேன்” என்றாள். இப்பொழுது, அங்கே தான் உங்களுக்குத் தேவையானது இருக்கிறது. இப்பொழுது, அது அவளுடைய தொடுதலாக இருந்தது, அவள் மாத்திரம் அவருடைய வஸ்திரத்தைத் தொட முடியுமானால், அவள் சுகமாகி விடுவாள். 25. இப்பொழுது, சபையாரில் ஒருவரையும் ஒருவரையும் கர்த்தராகிய இயேசுவோடு அவளால் கொண்டிருக்க முடியாது என்பதை அவள் அறிந்திருந்தாள், எனவே, நான் அவளைக் கண்டு, அவள் அவரைச் சந்திக்கும்படியாக அந்த மலையின் கீழாக இறங்கி வந்து கொண்டிருப்பதை என்னால் கற்பனை செய்து பார்க்க முடிகிறது, அது உங்களுக்குத் தெரியும். அங்கே, அவர் தெருவில் மேலே ஏறி வந்து கொண்டிருந்தார், மற்ற பட்டணங்களில் அவர் செய்திருந்த அவருடைய... மகிமையான கிரியைகளுக்காக ஜனங்கள் தேவனைப் போற்றிப் புகழ்ந்து கொண்டிருந்தனர், மேலும் அங்கேயும் ஏதோவொன்று செய்யப்படும் என்று காண எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். 26. ஆசாரியர்கள் பின்னால் விலகி நின்று கொண்டிருந்தனர், குளிர்ந்து போனதும், சம்பிரதாயமானதுமான சபை அங்கத்தினர்கள், "இப்பொழுது, நீங்கள் இதைக் கவனிக்க விரும்புகிறேன். யார் அவரை ஆராதிக்கிறார்கள் என்று பாருங்கள்: அங்கே ஆற்றுக்கு அப்பாலுள்ள அந்த மனிதர்கள் தான்; பின்செல்லுகிற (backwash) அந்தப் பரிதாபமான கூட்டம் அவர்கள் தான்; நமக்கு சொந்தமான நம்முடைய ஜெப ஆலயத்தில் நமக்கு உபயோகமில்லாத ஏதோவொன்று தான் அவர்கள்: அவர்கள் தான் அவரை ஆராதிக்கின்றனர்" என்று கூறிக் கொண்டிருக்கின்றனர். நல்லது, அது... நல்ல காரியம் தான், எப்படியும் அவரை ஆராதிப்பதற்கு யாரோ ஒருவரை அவர் கொண்டிருந்தார். 27. எனவே, அதன்பிறகு, இந்தச் சிறிய பெண்மணி நழுவி பக்கத்தில் வருவதை என்னால் காண முடிகிறது, அவளுடைய முகம் வெளிறிப் போயிருந்தது, அவளுடைய சிறிய உதடுகள் மிகவும் மெலிந்து போய் காணப்பட்டது, அவளுடைய சரீரமோ பலவீனமாய் இருந்தது, அவள் நழுவி பக்கத்தில் வந்து கொண்டிருந்தாள். அவள் தான் பின்னிக் கொண்டிருந்த காரியங்களை (knitting) கீழே வைத்து விட்டு, அவள் இறங்கி வருகிறாள். நீங்கள் அறிகிற முதலாவது காரியம் என்னவென்றால், அவள் அதன் வழியாக நெருக்கியடித்துக் கொண்டு வர முயற்சித்துக் கொண்டிருக்கிறாள், அப்போது அவள் தன்னுடைய மேய்ப்பரை நோக்கி விரைந்தோடிச் சென்று, "நீர் எங்கே போய்க் கொண்டிருக்கிறீர்?” என்று கேட்டாள். 28. அவள், "சங்கை, ஐயா, நான்... நான் அங்கே மேலே இருக்கையில், என்னால் அவருடைய வஸ்திரத்தைத் தொடக் கூடுமானால், என்று ஏதோவொன்று என்னிடம் எனது இருதயத்தில் கூறினது" என்றாள். 29. "ஏன், மிக அதிக துணிச்சல் தான். நீர் கொண்டிருக்கிற அந்த போதனைகள் எல்லாவற்றிற்கும் பிறகு, அதைப் போன்ற அப்படிப்பட்ட ஒரு காரியத்தை நீர் விசுவாசிக்கிறீரா?" 30. ஆனால், நான் மாத்திரம் அவரைத் தொட முடியுமானால், நான் சுகமாகி விடுவேன் என்று ஏதோவொன்று என்னுடைய இருதயத்தில் என்னிடம் கூறுகிறது. நீர் எனக்காக என்ன தான் செய்திருக்கிறீர்? மருத்துவர்கள் எனக்காக என்ன செய்துள்ளனர்? இதுதான் எனக்குள்ள ஒரே நம்பிக்கை, எனவே தான் நான் அவரைத் தொடும்படி முயற்சித்துக் கொண்டிருக்கிறேன்” என்றாள். 31. தேவனே, இங்கே இன்றிரவு உட்கார்ந்து கொண்டிருக்கும் ஒவ்வொரு நபருக்கும் அம்மாதிரியான விசுவாசத்தை கொடுத்தருளும். நான் அவரைத் தொடட்டும், மற்ற ஜனங்கள் என்ன கூறினாலும், அது காரியமில்லை, நான் அவரைத் தொடட்டும். அவரிடம் போங்கள், அதுதான் முக்கியமான காரியம். 32. என்னால் அவளைக் காண முடிகிறது. அவள் கடந்து செல்கிறாள். அந்த மேய்ப்பரோ, "நீ அவ்வாறு செய்வாயானால், சபை புத்தகத்திலிருந்து உன்னுடைய பெயரை நீக்கி விடுவேன்” என்றார், உ-ஊ, "நீ அவ்விதம் செய்வாயானால்.” 33. அது அவளுக்கு எந்த வித்தியாசத்தையும் உண்டாக்கவில்லை, அவளுடைய இருதயமோ உறுதியாக இருந்தது. அவள் இயேசுவிடம் போக விரும்பினாள், அதுதான் முக்கியமான காரியம். 34. டீக்கன் வாரியம், "சரி. நீ மீண்டும் ஞாயிறு காலையில் வந்தால், நாங்கள் உன்னை கவனித்துக் கொள்கிறோம், நாங்கள் உன்னை வெளியே தள்ளி விடுவோம்” என்றார்கள். 35. அது அவளுக்கு எந்த வித்தியாசத்தையும் உண்டாக்கவில்லை, அவள் அங்கே அதனூடாக நெருக்கியடித்துக் கொண்டு போனாள், அவள் அநேகமாக அவள் ஒரு இடத்தை அடைவது மட்டுமாக அவர்களுடைய கால்களுக்கு இடையிலும், மற்ற யாவற்றிற்கு இடையிலும் ஊர்ந்து சென்று, அவருடைய வஸ்திரத்தைத் தொட்டு, அவ்விதமாக பின்னால் விலகி வெளியே அந்தக் கூட்டத்தில் நின்று கொண்டு, "நல்லது, செய்ய வேண்டும் என்று நான் விரும்பினது இதுதான்" என்றாள். 36. பரிசேயர்களும்... அவளுடைய மேய்ப்பரும் அவர்களும், "இப்பொழுது, உன்னிடத்தில் எந்த வித்தியாசமும் இல்லையே" என்று கூறுவதை என்னால் கேட்க முடிகிறது. 37. “அங்கே வித்தியாசம் ஏதாகிலும் இருக்கிறது என்று நீங்கள் நினைக்காமல் இருக்கலாம், ஆனால் அங்கே வித்தியாசம் உள்ளதை நான் அறிவேன்" என்று அவள் கூறினாள். 38. நீங்கள் அறிகிற முதலாவது காரியம் என்னவென்றால், அந்த விசுவாசம் அவளுக்குள் சென்றது, கர்த்தராகிய இயேசு சுற்றும் முற்றும் பார்த்து, கூறினார், (ஏதோவொன்று, கொஞ்சம் வல்லமை (strength), அவரை விட்டு வெளியே எங்கேயோ போனதை அவர் உணர்ந்து கொண்டார்), அவர், "மகளே, உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது” என்றார். ஆமென். உதிரப் போக்கு நின்றது, சரியாக அப்போதே நின்று விட்டது. அவளுடைய விசுவாசம் இயேசுவை நிறுத்தி, அவளுடைய விசுவாசமே அவளுக்குத் தேவையாயிருந்ததை பெற்று விட்டது. 39. ஒரு சிறிய மனிதன் தன்னுடைய சிறிய மகளோடு இருந்து விட்டு, அங்கிருந்து, வந்து கொண்டிருப்பதை நான் காண்கிறேன், அவன் தன்னுடைய முகமும், தன்னுடைய கண்களும் கூட சிவந்து கொண்டிருக்க, நீண்ட நேரமாக தேடிக் கொண்டிருந்தான். அவன் உள்ளே நழுவி வந்து கொண்டிருந்தான், அப்போது அவன் சேர்ந்திருந்த அதே சபையிலிருந்து பார்க்கும்படி வந்திருந்த அந்த மற்ற மத குருக்கள் (clergymen) எல்லாரையும் அவன் காண்கிறான். "இப்பொழுது, நான் என்ன செய்யப் போகிறேன்? அதோ இயேசு இருக்கிறார், ஆனால் யார் என்னைப் பார்த்துச் சிரிக்கப் போகிறார்கள் என்று பாருங்கள். நான் இன்றிரவு சபைக்குப் போவதை அவர்கள் எல்லாரும் கண்டு, நான் எம்மாதிரியான ஒரு கூட்டத்தோடு தொடர்பு வைத்திருக்கிறேன் என்று பார்ப்பார்களே, ஆனால் என்னுடைய மகளோ மரித்துக் கொண்டிருக்கிறாள், நான் அவரிடம் போய் சேர்ந்தாக வேண்டும்.” 40. இதோ அவள்... இதோ அவன் கீழிறங்கிச் சென்று, 'போதகரே, ஆண்டவரே, நீர் வந்து என்னுடைய சிறு மகளின் மேல் உமது கரத்தை வையும், அப்பொழுது அவள் குணமாகி விடுவாள், அது என்னுடைய ஒரே மகள், அவள் இப்பொழுது மரணத்தருவாயில் (at the point of death) இருக்கிறாள். நீர் வெறுமனே வந்து அவள் மேல் உமது கரத்தை வைப்பீரென்றால், அவள் சுகமாவாள்” என்றான். 41. இப்பொழுது, அது தான் அவனுடைய விசுவாசமாயிருந்தது, அவள் மேல் கைகளை வைப்பது, அதைத்தான் அவன் விசுவாசித்தான். 42. முந்தின இரவிலோ, அல்லது அதைப்போன்ற இரவில், பேதுரு படகில் இருக்க, தண்ணீர் கொந்தளித்துக் கொண்டிருக்க, இயேசு நின்று கொண்டு, தண்ணீரின் மேல் நடந்து கொண்டிருந்தார், அவர்களே.... அவன் அவரைப் பார்த்து பயந்தான். அவரை - அவரைப் பேய் என்றோ அல்லது ஏதோவொன்று என்று அவன் நினைத்தான். அது ஒரு-ஒரு ஆவி என்று அவன் எண்ணினான். அவர்களுக்கு உதவி செய்யக் கூடிய ஒரே காரியத்தைக் குறித்தே அவர்கள் பயந்தனர். 43. இன்று ஜனங்களிடமும் அந்தவிதமாகத்தான் இருக்கிறது. இன்றிரவு அமெரிக்காவோடுள்ள காரியமும் அதுதான். ஒரு சர்வ சங்காரத்திலிருந்து அமெரிக்காவை இரட்சிக்கக் கூடிய ஒரே காரியம் என்னவென்றால் பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தோடு தேவனிடம் திரும்புவது தான். அது முற்றிலும் சரியே. அது உண்மை. அவர்கள் அதைக் குறித்து பயந்து போயினர். அது சரியே. வெடி குண்டுகளை குலுக்கித் தள்ளுகிற ஒரு எழுப்புதலை கொண்டிருக்கும்படியாக தேவன் நமக்கு உதவி செய்வாராக. அதுதான் இன்றிரவு நமக்கு அவசியமாயுள்ளது. 44. அப்போது, பேதுரு, “ஆண்டவரே, அது நீராக இருந்தால், உம்மிடம் வர எனக்குக் கட்டளையிடும், அப்போது நானும் நடந்து வருவேன். உம்முடைய வார்த்தையே எனக்குப் போதுமானது" என்றான். உடன்படிக்கைப் பெட்டியை (Ark) வைத்திருந்த அந்த ஆசாரியர்களுடைய கால்கள் அந்தத் தண்ணீரில் பட்ட போது, அங்கே தான் அவர்களுடைய விசுவாசம் இருந்தது, அவர்களுடைய கால்கள் தண்ணீரில் பட்ட போது. 45. வியாதிப்பட்ட நண்பனாகிய ஒரு வேலைக்காரனைக் கொண்டிருந்த அந்த ரோம நூற்றுக்கு அதிபதி, "நீர் என் வீட்டிற்குள் பிரவேசிக்க கூட நான் பாத்திரன் அல்ல: வெறுமனே வார்த்தையைப் பேசும், நான் அதிகாரத்துக்குக் கீழ்ப்பட்டவனாயிருந்தும், நான் இந்த மனிதனைப் பார்த்து, "இதைச் செய்" என்றால், செய்கிறான்; இந்த மனிதனைப் பார்த்து, “அதைச் செய்” என்றால் செய்கிறான்" என்றான். 46. பாருங்கள், அந்த மனிதன் சுகமாக அவசியமாயிருந்த சகல வல்லமையும் இயேசுவின் வார்த்தையில் இருந்தது என்பதை அந்த ரோமன் அடையாளம் கண்டு கொண்டான். அவருக்குள் யேகோவா தேவனின் வல்லமை சூழ்ந்து கொண்டிருந்ததை அவன் அறிந்திருந்தான். இயேசு என்ன கூறினாலும், அவர் வியாதிகளை ஜெயம் கொண்டவர் என்றும், அவர் சமுத்திரத்தை அடக்கி ஆள்பவர் என்றும், அவர் பிரபஞ்சத்தையும் அடக்கி ஆள்பவர் என்றும் அவன் அறிந்திருந்தான். 47. அவர் இன்றிரவும் அவ்விதமாகத்தான் இருக்கிறார், அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார். அவருடைய வார்த்தையானது ஒவ்வொரு பிசாசின் மேலும், ஒவ்வொரு வல்லமையின் மேலும், ஒவ்வொன்றின் மேலும், எல்லாவற்றின் மேலும், ஒவ்வொரு காரியத்தின் மேலும், ஒவ்வொரு பாவத்தின் மேலும், ஒவ்வொரு வியாதியின் மேலும், ஒவ்வொரு நோயின் மேலும், ஒவ்வொரு முடமான உறுப்பின் (cripple) மேலும் உச்ச அதிகாரத்தைக் (supremacy) கொண்டிருக்கிறது என்பதை மாத்திரம் நம்மால் அடையாளம் கண்டு கொள்ள முடியுமானால். இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார். அவர் என்ன சொன்னாரோ அதை விசுவாசியுங்கள். 48. அவன், "நான் அதிகாரத்துக்குக் கீழ்ப்பட்டவனாயிருக்கிறேன், எனக்குக் கீழாக இருக்கும் எவரும் எனக்குக் கீழ்ப்படிந்து தான் ஆக வேண்டும் என்பது எனக்குத் தெரியும்; என்னுடைய வார்த்தையே சட்டமும் கட்டளையுமாயிருக்கிறது; அவன் அதைச் செய்து தான் ஆக வேண்டும்" என்றான். இயேசு கிறிஸ்து வியாதியைத் தமது கால்களின் கீழே கொண்டிருந்தார் என்பதை அவன் அறிந்திருந்தான். ஒவ்வொரு வியாதியையும் அவர் தமது கால்களின் கீழே கொண்டிருந்தார். 49. அவர் அந்த நோக்கத்துக்காக மரித்து, உங்களுக்காகவும் எனக்காகவும் அதைக் கிரயம் செலுத்தி வாங்கின பிறகு, எவ்வளவு அதிகமாக நாம் அவருடைய வார்த்தையை விசுவாசிக்க வேண்டும். ஆமென். உங்களுக்குத் தேவையானது அங்கே தான் இருக்கிறது. 50. இயேசு கூறுவது சரியாக உள்ளது: "என் நாமத்தினாலே நீங்கள் எதைக் கேட்டாலும், நான் அதைச் செய்வேன்” என்று இயேசு கிறிஸ்து கூறின, தேவனால் கொடுக்கப்பட்ட உங்களுடைய அதிகாரத்தை நீங்கள் உரிமை கோருவீர்களானால், நீங்கள் ஒவ்வொரு பிசாசின் மேலும், ஒவ்வொரு வியாதியின் மேலும், மேலும், ஒவ்வொரு நோயின் மேலும் ஜெயங்கொள்ள முடியும். ஆமென். ஒரு கூட்டம் ஜனங்களை எழுப்புவதற்கு நமக்கு இன்றிரவு அதுதான் அவசியமாயுள்ளது. பெந்தெகோஸ்தேயினர் என்று தங்களைத் தாங்களே அழைத்துக் கொள்ளும் அந்த ஜனங்கள், பெரும் விடாமுயற்சியோடு தங்கள் இருதயங்களை ஒன்றாக இணைத்து, "இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார். அவருடைய வல்லமை உச்ச உயர் அதிகாரம் (supreme) உடையது, அவர் தம்முடைய வார்த்தையில் என்ன கூறியிருக்கிறாரோ அதை அவர் ஆதரிப்பார்" என்று கூற முடியும். ஆமென். அப்போது ஒரு சபை தேவனுடைய மகிமையின் வல்லமையில் எழும்பி, தொடர்ந்து செல்வதை நீங்கள் காண்பீர்கள். ஆமென். 51. இப்பொழுது, யவீரு, "நீர் வந்து உம்முடைய கைகளை என்னுடைய குமாரத்தியின் மேல் வையும், அப்பொழுது அவள் சுகமடைவாள்” என்றான். 52. இயேசு, "நான் வருகிறேன்" என்றார். 53. இதோ அவர்கள் தொடர்ந்து போக ஆரம்பிக்கின்றனர். பரிதாபமான சிறு யவீருவின் இருதயம் விட்டு விட்டு அடித்துக் கொள்ள, ஓ, சபை என்ன கூறினாலும் எனக்கு எனக்குக் கவலையில்லை. நான் அவரை என்னோடு கொண்டிருக்கிறேன், இப்பொழுது அவர் என்னுடைய வழியில் வந்து கொண்டிருக்கிறார். அவர் என்னுடைய வீட்டிற்குத்தான் வந்து கொண்டிருக்கிறார். எனக்குத் தெரியும், அவர் எப்பொழுதாவது என்னுடைய வீட்டிற்குள் வந்து விடுவாரென்றால், மற்றவர்கள் என்ன கூறினாலும் எனக்குக் கவலையில்லை" என்று கூறிக் கொண்டு நெடுக போய்க் கொண்டிருப்பதை என்னால் காண முடிகிறது. 54. நானும் கூட அதைக் குறித்து அவ்விதமாகத்தான் உணருகிறேன். நான் ஒரு பாப்டிஸ்ட் பிரசங்கியாராய் இருந்த போது, நான் போனால், அவர்கள் “அந்த பரிசுத்த உருளையர்களோடு முட்டாளாக்கிக் கொள்கிறாய்" என்று என்னிடம் கூறினார்கள், நானோ அவர்களில் ஒருவனாய் இருந்தேன். இயேசு ஒரு நாள் என் வீட்டிற்கு வந்தார். அல்லேலூயா! அதற்குப் பிறகு அவர்கள் என்ன கூறினாலும் எனக்குக் கவலையில்லாதிருந்தது. ஆம், ஐயா. அவர் என்னுடைய வீட்டிற்கு வந்த பிறகு, நான் அக்கறை கொண்ட போது, அது அதைத் தீர்த்து வைத்தது. அவர் அங்கே வந்ததற்காக நான் அவர் நிமித்தம் சந்தோஷப்படுகிறேன். மற்ற உலகத்தார் என்ன கூறினாலும் அது எந்த வித்தியாசத்தையும் உண்டாக்கவில்லை. 55. அவர் என்னுடைய வீட்டிற்குள் இருக்கிறார் என்பதை நான் அறிந்திருக்கும் காலம் வரையில், அவர்கள் இன்றிரவு என்ன கூறினாலும், அது எனக்கு ஒரு பொருட்டேயல்ல. ஆமென். எல்லா காரியமும் சரியாக உள்ளன, இப்பொழுது அங்கே உள்ளே சமாதானமும் அமைதியும் உள்ளது. அங்கே யுத்தங்களும் தொல்லைகளும் இருந்த இடத்தில், இப்பொழுதோ அவை அனைத்தும் அமைதியாகி விட்டன. இயேசு உள்ளே வந்து விட்டார். 56. யவீரு நெடுக போய்க் கொண்டிருப்பதை என்னால்காண முடிகிறது. அப்போது அதிர்ச்சி தரும் செய்தி வருகிறது. அந்தவிதமாகத்தான் பிசாசு அதைச் செய்கிறான். நீங்கள் அறிகிற முதலாவது காரியம் என்னவென்றால், இதோ ஒரு மனிதன் ஓடி வந்து, "போதகரை வருத்தப்படுத்த வேண்டாம்; அவள் ஏற்கனவே மரித்து விட்டாள்” என்றான். ஓ, அந்த மரண அதிர்ச்சி. 57. சிறிய யவீரு சடுதியாய் தாக்கப்பட்டு, தன்னுடைய இருதயத்தைப் பிடித்துக் கொள்வதை என்னால் காண முடிகிறது. இயேசுவோ அமைதியாகவும் சாந்தமாகவும் அங்கே சேர்ந்து போய்க் கொண்டிருப்பதை என்னால் காண முடிகிறது, அப்போது அவர் தம்முடைய மகிமையான கண்களைத் திருப்பி அவனைப் பார்த்து, ""பயப்படாதே: விசுவாசிக்க மாத்திரம் செய் (விசுவாசமுள்ளவனாயிரு' என்று நான் சொல்லவில்லையா" என்று கூறினார். ஆமென். என்னே, அந்தச் சிறிய இருதயம் தளர்ந்து போய், மீண்டும் மீண்டும் அடிக்கத் துவங்கினது. ஏன்? அந்த வார்த்தையானது இம்மானுவேலிடமிருந்து வந்திருந்தது என்பதை அவன் அறிந்திருந்தான். "பயப்படாதே: நீ தேவனுடைய மகிமையைக் காண்பாய்' என்று நான் உனக்குச் சொல்லவில்லையா?” 58. தொடர்ந்து போய்க் கொண்டிருக்கிறார்கள், யவீரு, “ஆம், ஆம், ஆண்டவரே, அது தான் உண்மை” என்றான். 59. அவர்கள் வீட்டிற்கு அருகில் வரும் போது, அவர்கள் எல்லாரும் அழுது கொண்டும் உரத்த சத்தமிட்டுக் கொண்டும் இருப்பதை என்னால் கேட்க முடிகிறது, அங்கே வெளியே அவர்கள் தொடர்ந்து அப்படி செய்து கொண்டு, அதிக சத்தம் போட்டுக் கொண்டிருந்தனர். சபை அங்கத்தினர்கள் சூழ்ந்து நின்று, “உ-ஊ, நீ உனக்கு நீயே அவமானத்தை வருவித்துக் கொண்டாய்; நீ அங்கே கீழே போய் நீ யாரென்பதைக் காண்பித்து விட்டாய்” என்று கூறுவதை என்னால் காண முடிகிறது. நீங்கள் யாரென்பதை காண்பிப்பது ஒரு நல்ல காரியமே. எனக்கு அது பிடிக்கும். ஆம், ஐயா.” உ-ஊ”, இப்பொழுது பார், இதோ உன்னுடைய மகள் மரித்தவளாக அங்கே கிடக்கிறாள்” என்று கூறினர். யவீருவோ தன்னுடைய காதுகளைப் பொத்திக் கொண்டு, தொடர்ந்து நடந்து கொண்டிருந்தான். 60. இயேசு, "பயப்படாதே” என்றார். அவன் பயப்படவேயில்லை. அவன் அப்படியே தொடர்ந்து மரணத்தை நோக்கிப் போய்க் கொண்டிருந்தான். 61. இப்பொழுது, நடக்க முடியாத (காரியங்களுக்காக) அவன் விசுவாசிக்க வேண்டியதாயிருந்தது, ஆனால் அவன் எப்படியும் விசுவாசித்தான். அது எவ்வளவு நடக்க முடியாத (காரியமாக) இருந்தாலும் ஒரு பொருட்டல்ல, இயேசு அதைக் கூறினால், அது உண்மையாக உள்ளது. ஆமென். அவரை அவருடைய வார்த்தையில் எடுத்துக் கொள்ளுங்கள், அதுதான் அதைத் தீர்த்து வைக்கிறது. இதோ அவர்கள் போகிறார்கள், அவர்கள் உள்ளே போகையில், ஒருவர் ஒருவராய் நடந்து போகிறார்கள். ஜனங்கள் அவரைக் கேலி செய்யத் துவங்குகின்றனர். அவர், "வழி விடுங்கள்" என்றார், வேறு வார்த்தைகளில், "சத்தம் போடாதீர்கள். இந்தப் பெண், இந்தச் சிறு பெண் பிள்ளை மரிக்கவில்லை, அவள் மரிக்கவில்லை, நித்திரையாயிருக்கிறாள்” என்றார். மற்ற எவரையும் விட அவர் அதைக் குறித்து அதிகம் அறிந்திருந்தார். அது உண்மை. அவர்கள் அவரைப் பார்த்து சிரித்தார்கள், அவர்கள் அவரை கேலி செய்த காரணத்தினால், அவர்கள் வெளியே தள்ளப்பட்டார்கள். 62. எனவே, அவரைக் கேலி செய்ய வேண்டாம்; அப்படி செய்வீர்களானால், உலகம் இருப்பது எவ்வளவு நிச்சயமோ அவ்வளவு நிச்சயமாக நீங்கள் வெளியே தள்ளப்படுவீர்கள். அது உண்மை. அவரைத் தொழுது கொள்ளுங்கள், அவரை விசுவாசியுங்கள், அவருக்குத் துதியையும் மகிமையையும் செலுத்துங்கள், உலகம் என்ன கூறினாலும் அது ஒரு பொருட்டல்ல, அவர் என்ன செய்யக் கூறினாரோ அதையே செய்யுங்கள். அது உண்மை. அவரை விசுவாசியுங்கள், உங்கள் நம்பிக்கையை அவர்மேல் வையுங்கள். அது சரியே. வெளியே தள்ளப்படாதீர்கள். பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்ளுங்கள்: நீங்கள் அந்த சரீரத்திற்குள் ஞானஸ்நானம் பண்ணப்பட்டு, நீங்கள் மீட்கப்படும் நாளுக்கென்று முத்திரையிடப்பட்டிருக்கிறீர்கள். உலகம் என்ன கூறினாலும் அது ஒரு பொருட்டல்ல, இயேசு கிறிஸ்து, அவர் தம்முடைய கரங்களை உங்களைச் சுற்றிலும் போட்டிருப்பாரானால், வேறு என்ன சம்பவித்துக் கொண்டிருந்தாலும் அதைக் கவனிக்காதீர்கள். ஆமென். 63. அவர் தொடர்ந்து உள்ளே நடந்து செல்வதை என்னால் காண முடிகிறது. அவர்கள், "ஓ, அவள் மரித்து விட்டாள் என்பது நமக்குத் தெரியும். இப்பொழுது, அங்கே மேலே அவ்விதமாக நடந்து கொள்ளும், அந்த பரிசுத்த உருளையனைக் கவனியுங்கள், அந்தச் சிறு பெண் பிள்ளை மரிக்கவில்லை என்று கூறுகிறானே. அவள் மரித்து விட்டாள் என்று நமக்குத் தெரியும். நீங்கள் பார்க்கவில்லையா? அந்த மனிதனுக்கு ஏதோ மனக் கோளாறு ஏற்பட்டிருக்கிறது" என்றார்கள். இல்லை, இல்லை, மனநிலை கோளாறைக் கொண்ட பாகத்தினர் அந்த மற்ற குழுவினர் தான். 64. அவர்கள் இன்றும் அவ்வாறு தான் கூறுகிறார்கள்: "சபைக்கு ஏதோ மனநிலைக் கோளாறு ஏற்பட்டிருக்கிறது" என்று கூறுகிறார்கள். 65. சபைக்கு எந்தக் கோளாறும் இல்லை. உ-ஊ. ஒருவிசை அவர்கள் பவுலும் சீலாவும் உலகத்தைக் கலக்குகிறவர்கள் என்று கூறினார்கள். இல்லை, இல்லை, அவர்கள் அதைச் சரியாக மறுபடியும் பழைய நிலைக்குத் திருப்பிக் கொண்டு வந்தார்கள். அது துவக்க முதலே தலைகீழாகத்தான் (கவிழ்க்கப்பட்டு) இருந்தது. 66. அது இன்றும் அவ்விதமாகத்தான் இருக்கிறது. உலகத்தைத் தலைகீழாக்கி (கவிழ்த்துப்) போடுவதல்ல, அதை மறுபடியும் சரியான பழைய நிலைக்குத் திருப்பி, இயேசு கிறிஸ்துவினுடைய மகத்துவத்தின் வலது பாரிசத்தில் வீற்றிருக்கிற அவர் இருக்கும் பரலோகத்தை நோக்கி அதைச் சுட்டிக் காட்டுவது தான். அது சரியே. உலகத்தைத் தலை கீழாக்குவதல்ல, ஆனால் அதைச் சரியானதற்குத் திருப்புவது, அப்போது அது மேலே நோக்கிப் பார்க்கும். இன்றிரவு கலிபோர்னியாவில் நமக்குத் தேவையாயிருப்பது அதுதான், இன்றிரவு முழு உலகத்திற்கும் அவசியமாயிருப்பது அதுதான்: அதாவது இந்த பூமியோடு கட்டப்பட்டிருக்கிற நிலையிலிருந்து ஜனங்களை குலுக்கி அசைத்து, அவருடைய நாமத்தில் நாம் எதைக் கேட்டாலும் அதைக் கொடுப்பார் என்ற அதிகாரத்தை நமக்குக் கொடுத்திருக்கிறவரும், சிருஷ்டிப்புகளை சிருஷ்டித்தவரும், அதோ அங்கே நட்சத்திரங்களுடைய சுற்று வட்டப் பாதைகளில் நட்சத்திரங்களை வைத்திருக்கிறவருமாகிய, அதோ அங்கேயுள்ள ஒரு பரலோகப் பிதாவை நோக்கி நிமிர்ந்து பார்க்கும்படியான ஒரு எழுப்புதல் தான் அவசியமாயுள்ளது. 67. நம்முடைய விசுவாசம் எங்கே? என்னே, நான், நம்முடைய சிறிய, பெலவீனமான விசுவாசத்தை அவருக்கு அளிக்க முயற்சிப்பதற்காக, நான் நம்மைக் குறித்து சிலசமயங்களில் வெட்கப்படுகிறேன். 68. இப்பொழுது, நீங்கள் இதைக் கவனிக்க நான் விரும்புகிறேன். அவர்கள் வெளியே துரத்தப்பட்ட போது, அவர்களுடைய அவிசுவாசத்தின் நிமித்தமாகவும் அவர்கள் நகைத்ததின் நிமித்தமாகவும், இயேசு இருதயம் உடைக்கப்பட்டவராய் அந்தப் (பிள்ளையின்) தகப்பனாரோடும் தாயாரோடும், பேதுருவோடும், யாக்கோபோடும், யோவானோடும் தனிமையாக நின்று கொண்டிருந்தார். அங்கே அவர் வெளியிலே இருந்தார். அவர்கள், "யவீரு வெளியில் வந்து, நாம் அவன் மேல் சபையின் தண்டிப்புகளை ஏற்கச் செய்யும் வரை சற்று பொறுங்கள். நாம் இந்தக் குடும்பத்தையே வெளியே தூக்கி வீசி எறிந்து விடலாம்” என்று கூறிக் கொண்டிருப்பதை என்னால் கேட்க முடிகிறது, அந்த ஆசாரியன், “அதைப் போன்ற அப்படிப்பட்ட ஒரு கூட்டத்தை ஏற்றுக் கொண்டு, நாம் அவர்களோடு செய்வதற்கு நமக்கு வேறு எதுவும் கிடையாது. ஏன், அவர்கள் அவமானத்தைக் கொண்டு வந்து, உலகத்தை தலைகீழாக்கி கவிழ்த்துப் போடுவதைத் தவிர தவிர வேறு எதையும் செய்யவில்லை” என்றான். அங்கே வெளியில் ஏற்பட்ட (பேசப்பட்ட) அந்த சத்தங்கள் எல்லாவற்றையும் கவனியுங்கள், அதைக் கவனியுங்கள். 69. ஆனால் அந்த கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினிடத்தில், இந்த பூமியின் எல்லைகளுக்குட்பட்ட கட்டுப்பாடுகளுக்கும் அப்பால் செல்லும் ஒரு வல்லமையை அவர் உடையவராய் இருந்தார். ஆம், ஐயா. அவர் அவருடைய நாமத்தில் நாம் எதைக் கேட்டாலும் அதைக் கொடுப்பார் என்ற அதிகாரத்தை நமக்குக் கொடுத்திருக்கிறவரும், சிருஷ்டிப்புகளை சிருஷ்டித்தவரும், அதோ அங்கே நட்சத்திரங்களுடைய சுற்று வட்டப் பாதைகளில் நட்சத்திரங்களை வைத்திருக்கிறவருமாகிய, அதோ அங்கேயுள்ள ஒரு பரலோகப் பிதாவை நோக்கி நிமிர்ந்து பார்க்கும்படியான ஒரு எழுப்புதல் தான் அவசியமாயுள்ளது. 67. நம்முடைய விசுவாசம் எங்கே? என்னே, நான், நம்முடைய சிறிய, பெலவீனமான விசுவாசத்தை அவருக்கு அளிக்க முயற்சிப்பதற்காக, நான் நம்மைக் குறித்து சிலசமயங்களில் வெட்கப்படுகிறேன். 68. இப்பொழுது, நீங்கள் இதைக் கவனிக்க நான் விரும்புகிறேன். அவர்கள் வெளியே துரத்தப்பட்ட போது, அவர்களுடைய அவிசுவாசத்தின் நிமித்தமாகவும் அவர்கள் நகைத்ததின் நிமித்தமாகவும், இயேசு இருதயம் உடைக்கப்பட்டவராய் அந்தப் (பிள்ளையின்) தகப்பனாரோடும் தாயாரோடும், பேதுருவோடும், யாக்கோபோடும், யோவானோடும் தனிமையாக நின்று கொண்டிருந்தார். அங்கே அவர் வெளியிலே இருந்தார். அவர்கள், "யவீரு வெளியில் வந்து, நாம் அவன் மேல் சபையின் தண்டிப்புகளை ஏற்கச் செய்யும் வரை சற்று பொறுங்கள். நாம் இந்தக் குடும்பத்தையே வெளியே தூக்கி வீசி எறிந்து விடலாம்” என்று கூறிக் கொண்டிருப்பதை என்னால் கேட்க முடிகிறது, அந்த ஆசாரியன், “அதைப் போன்ற அப்படிப்பட்ட ஒரு கூட்டத்தை ஏற்றுக் கொண்டு, நாம் அவர்களோடு செய்வதற்கு நமக்கு வேறு எதுவும் கிடையாது. ஏன், அவர்கள் அவமானத்தைக் கொண்டு வந்து, உலகத்தை தலைகீழாக்கி கவிழ்த்துப் போடுவதைத் தவிர தவிர வேறு எதையும் செய்யவில்லை” என்றான். அங்கே வெளியில் ஏற்பட்ட (பேசப்பட்ட) அந்த சத்தங்கள் எல்லாவற்றையும் கவனியுங்கள், அதைக் கவனியுங்கள். 69. ஆனால் அந்த கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினிடத்தில், இந்த பூமியின் எல்லைகளுக்குட்பட்ட கட்டுப்பாடுகளுக்கும் அப்பால் செல்லும் ஒரு வல்லமையை அவர் உடையவராய் இருந்தார். ஆம், ஐயா. அவர் குளிர்ந்து போய், அசைவற்ற நிலையில் மரித்துக் கிடந்த ஒரு சிறு பெண் பிள்ளையிடம் நடந்து சென்று, (ஓ, அல்லேலூயா!), அவளின் கையைப் பிடித்து, சுற்றும் முற்றும் எல்லாவிடங்களிலும் நோக்கிப் பார்த்தார். எல்லாரும் எங்கே? அவர்கள் பரிகசித்துக் கொண்டும், குறைகூறிக் கொண்டும் மற்றும் யாவற்றையும் செய்து கொண்டும் வெளியில் இருந்தனர். அவரோ வேறொரு உலகத்திற்குள் பேசக் கூடியதான ஒரு வல்லமையைக் கொண்டிருந்தார். அவர் அந்நிய பாஷைகளில் பேசி, "தலீத்தா" என்றார், அதாவது, “ஆத்துமாவே, இங்கே இந்தச் சிறு பெண்ணிடம் திரும்பி வா" என்றார். அல்லேலூயா! 70. அவர் அதே வல்லமையை தமது சபைக்கும் கொடுத்திருக்கிறார். ஆமென். நீங்கள் கைவிடப்பட்டு, மனந்தளர்ந்து போகும் போது, வேறொரு உலகத்திற்குள் பேசும்படியான ஒரு பாஷையை தேவன் நமக்குக் கொடுக்கிறார். இயேசு சிலுவையில் கைவிடப்பட்டு, எல்லா மனுஷரும் அவரைப் புறக்கணித்த போது, அவர், "என் தேவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்?” என்று வேறொரு பாஷையில் பேசிக் கொண்டே மரித்தார். சபையும் இன்றிரவு அம்மாதிரியான வல்லமைகளை உடையதாயிருக்கிறது. அல்லேலூயா! 71. மரித்துப் போன அந்தச் சிறு பெண் பிள்ளை, அங்கே மரித்து, அந்த சரீரம் நறுமணமூட்டப்பட்டு, கிடந்தது, அது மலர்கள் நேராக வைக்கப்பட்டு ஒரு படுக்கையில் கிடத்தப்பட்டிருந்தது, கிடத்தப்பட்டிருந்தது, அவர்கள் எல்லாரும் அவளைச் சூழ்ந்து இருந்தனர். அந்த சாவுக்குரிய ஆத்துமா அதோ அங்கே வெளியே இருந்தது, அது தன்னுடைய எஜமானரை அறிந்திருந்தது, அந்த ஆத்துமா மறுபடியுமாக இந்த சரீரத்திற்குள் திரும்பி வந்தது; அங்கே மரித்து, நறுமணமூட்டப்பட்டு ஒரு படுக்கையில் கிடத்தப்பட்டிருந்த ஒரு சிறு பெண், மீண்டும் தன்னுடைய காலூன்றி எழுந்தாள். அல்லேலூயா! 72.அப்போது, யவீருவினுடைய சாட்சி அத்தேசத்தைச் சுற்றிலும் இருப்பதை என்னால் கற்பனை செய்து பார்க்க முடிகிறது. உங்களால் முடியவில்லையா? 73. இன்றிரவும் அதே காரியம் தான். இயேசு கிறிஸ்துவோடு ஒருமுறை தொடர்பு கொண்டு, அவருடைய உயிர்த்தெழுதலின் வல்லமையை அறிந்து, அவருடைய சுகமளிக்கும் வல்லமையை அறிந்தவர்கள்: உலகம் என்ன கூறினாலும், வேறு யார் என்ன கூறினாலும், நீங்கள் கவலைப்படவேண்டாம்; நீங்கள் எப்பொழுதாவது இயேசு கிறிஸ்துவோடு தொடர்பு கொள்வீர்களானால், அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார் என்பதை அறிந்து கொள்வீர்கள்; உலகமோ, ஜனங்களோ என்ன கூறினாலும், அது இதற்கு ஒப்பாகாது. (சகோதரன் பிரன்ஹாம் தம்முடைய விரல்களைச் சொடுக்குகிறார் ஆசி.) ஆமென்! 74. பரிசுத்த ஆவியானவர் இப்பொழுது இக்கட்டிடத்தில் இருக்கிறார். நான் இங்கே நின்று கொண்டு, துவங்கவிருக்கிற அந்த சுகமளிக்கிற ஆராதனைக்காக அபிஷேகத்தைப் பற்றிக் கொண்டிருக்க முயற்சிக்கையில், இந்த முழு கட்டிடமும் எனக்கு பால் போன்று வெண்மை நிறமாக ஆகிக் கொண்டிருப்பதாகத் தோன்றுகிறது. நான் ஒரு மதவெறியன் அல்ல. நான் மதவெறித்தனத்தை நம்புவது கூட கிடையாது, ஆனால் நான் என்ன காண்கிறேன் என்பதை நான் அறிவேன். நான் எதைக் குறித்துப் பேசிக் கொண்டிருக்கிறேன் என்பதும் எனக்குத் தெரியும். அது உண்மை. பரிசுத்த ஆவியின் அபிஷேகமானது சரியாக இப்பொழுதே இந்தக் கட்டிடத்திற்குள் அசைவாடிக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு நபரையும் சுகமாக்க பரிசுத்த ஆவியின் வல்லமை இங்கே உள்ளது, சரியாக இப்பொழுதே இந்த மேடையில் உள்ளது. நான் விசுவாசிக்கிறேன், அங்கே... நீங்கள் மாத்திரம்... அதைச் செய்வீர்களானால். நான் உங்களிடம் சத்தியத்தையேபேசிக் கொண்டிருக்கிறேன் என்று சென்ற இரண்டு இரவுகளில், இந்த ஆராதனைகள் மற்றும் காரியங்களில், தேவன் உங்களுக்கு நிச்சயமாகவே நிரூபித்திருக்கிறார். 75. நான் உங்களுக்குக் கூறுகிறேன், என்னுடைய ஜீவியத்தில் நான் எப்பொழுதாவது சத்தியத்தைக் கூறியிருப்பேனென்றால், அதை தேவனுக்கு முன்பாக இப்பொழுது கூறுகிறேன், இயேசு கிறிஸ்து 1900 வருடங்களுக்கு முன்பே உங்கள் ஒவ்வொருவரையும் சுகமாக்கி விட்டார். நீங்கள் செய்ய வேண்டிய ஒரே காரியம் என்னவென்றால், அதோ அங்கேயிருக்கிற அவருடைய பரிகாரத்தின் இரத்தத்தின் அடிப்படையில் அதை இப்பொழுதே ஏற்றுக் கொள்வது தான். “நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர்காயப்பட்டு,நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார், நமக்குச் சமாதானத்தை உண்டு பண்ணும் ஆக்கினை அவர் மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்," இப்பொழுது, இங்கேயுள்ள ஒவ்வொரு நபரும். சுவிசேஷத்தைப் பிரசங்கம் பண்ணுதல் அல்லது வேறு எதையாகிலும் செய்வது ஒரு காரியத்தை மாத்திரமே செய்கிறது, அவர் இங்கே இருக்கிறார் என்று நிரூபிக்கும்படியான ஜீவனுள்ள தேவனுடைய வல்லமையின் வெளிப்பாடாக மாத்திரமே உள்ளது. 76. நான் இங்கே பேசுவதற்காகவும், தேவனைக் குறித்து சிந்திப்பதற்காகவும், அவரை துதிப்பதற்காகவும் நின்று கொண்டிருக்கையில், அவர் இப்பொழுது இக்கட்டிடத்தில் இருக்கிறார் என்பதை நான் அறிவேன். யவீருவோடும், மரித்துப் போய் உயிரோடெழுப்பின ஒரு குமாரத்தியோடும் அந்த வீட்டிற்குள் இருந்த அதே தேவன் தான் இக்கட்டிடத்திலும் இருக்கிறார். அந்த இரவில் வெளியே சமுத்திரத்தின் மேல் பேதுருவோடு இருந்தவரும் அதே ஒருவர் தான், அவர் கூறின போது... தண்ணீரின் மேல் நடந்து வந்தான்; அந்த ஸ்திரீ அவருடைய வஸ்திரத்தின் ஓரத்தைத் தொட்டாளே, அவரே இன்றிரவும் உங்கள் மத்தியில் நின்று கொண்டிருக்கிறார். அது உண்மை. பரிசுத்த ஆவியானவர், இயேசு, “இரண்டு அல்லது மூன்று பேர் எங்கே கூடியிருக்கிறார்களோ, நான் அவர்கள் மத்தியில் இருப்பேன்” என்றார். அவர் இங்கேயிருக்கிறார். 77. இங்கே உள்ளேயிருக்கும் ஒவ்வொரு நபரிடமும், நான் அவருடைய குமாரனாகிய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், (நியாயத்தீர்ப்பின் நாளிலே நான் அவருக்கு முன்பாக நிற்பேன்), தேவனுடைய வார்த்தையின் அதிகாரத்தைக் கொண்டு நான் உங்களிடம் கூறுகிறேன், அவருடைய வல்லமையானது சரியாக இப்பொழுதே போதுமானதாக உள்ளது. 78. ஏதோவொன்று அசைவாடிக் கொண்டிருப்பதை நான் காண்கிறேன், வெளியே கூட்டத்தினரின் மேல் என்ன சம்பவித்துக் கொண்டிருக்கிறது என்பது எனக்குத் தெரியாது. என்ன கூற வேண்டும் என்பதே எனக்குத் தெரியவில்லை. நான் வார்த்தைகளுக்காக திக்குமுக்காடிக் கொண்டிருக்கிறேன். அவர் இப்பொழுது இங்கேயிருக்கிறார் என்பதை நான் அறிவேன். அது உண்மை. பரிசுத்த ஆவியானவர் இந்தக் கூட்டத்தினரில் அசைவாடிக் கொண்டிருப்பதை நான் காண்கிறேன். நான்... நான் எந்த ஜெப வரிசையையும் அழைக்க அவர்-அவர் அனுமதிக்கப் போவதில்லை. 79. நான் அதை சரியாக இப்பொழுதே காண்கிறேன். ஒரு-ஒரு கட்டியால் அவதிப்பட்டு, இங்கே உட்கார்ந்து கொண்டிருக்கும் ஒரு கறுப்பின பெண்மணியின் மேல் அது தொங்கிக் கொண்டிருக்கிறது, அவள் ஒரு சிறு வெள்ளை நிற தொப்பியை அணிந்து கொண்டு அங்கே உட்கார்ந்து கொண்டிருக்கிறாள். அவளுக்கு ஒரு கட்டி உள்ளது. அந்தக் கட்டியானது வயிற்றில் இருக்கிறது, இல்லையா, சீமாட்டியே? உன்னுடைய காலூன்றி எழுந்து நில். அது இப்பொழுது உன்னை விட்டுப் போய் விட்டது. நீ சுகமடைந்து விட்டாய். நீ வீட்டிற்குப் போகலாம். ஆமென். 80.ஓ, எல்லையற்ற வல்லமையையும் இரக்கத்தையும் உடையவராகிய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்துக்கு ஸ்தோத்திரம்... 81. ஆமாம், நான் அவரைக் காண்கிறேன், உ-ஊ, அவர் இங்கே ஒரு சீமாட்டியின் மேல் நின்று கொண்டிருக்கிறார், அவள் அங்கே வரிசையின் கடைசியில் வலது பக்கத்தில் இருந்து என்னை நோக்கிப் பார்த்தபடி உட்கார்ந்து கொண்டிருக்கிறாள். அவள் சிறுநீரக கல்லினால் அவதிப்படுகிறாள். சரி, சீமாட்டியே, எழுந்து நில். இயேசு கிறிஸ்து உன்னை சுகமாக்கி விட்டார். இப்பொழுது, வீட்டிற்குப் போ. உன் விசுவாசம் உன்னைச் சுகமாக்கிற்று. 82. சரியாக அவளுக்குப் பின்னால் ஒரு சீமாட்டி உட்கார்ந்து கொண்டிருக்கிறாள், ஏறக்குறைய இரண்டு வரிசைகளுக்குப் பின்னால், இரண்டு (வரிசைகளுக்கு) உள்ளே இருக்கிறாள், அவள் ஒரு புற்று நோயைக் கொண்டவளாய் அங்கே உட்கார்ந்து கொண்டிருக்கிறாள். சீமாட்டியே, நீ சுகமடைய வேண்டுமென்று விரும்புகிறாயா? இயேசு கிறிஸ்து உன்னை சுகமாக்கி விட்டார். உன்னுடைய காலூன்றி எழுந்து நில். அல்லேலூயா! ஓ! 83. சீமாட்டியே, நீ அதைக் குறித்து என்ன நினைக்கிறாய்? சற்று நேரத்துக்கு முன்பு தான் நான் உன்னை உணர்ந்தேன். நீ ஒரு கட்டியால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறாய், இல்லையா? ஒரு நிமிடம் உன்னுடைய காலூன்றி எழுந்து நில். நான் அவருடைய ஊழியக்காரன் என்று நீ விசுவாசிக்கிறாயா? நான் சத்தியத்தையே பிரசங்கித்தேன் என்று நீ விசுவாசிக்கிறாயா? இயேசு கிறிஸ்து நேற்றும் என்றும் மாறாதவராக இங்கேயிருக்கிறார் என்று நீ விசுவாசிக்கிறாயா? உனக்கு ஒரு கட்டி உள்ளது, அந்தக் கட்டி தலையில் உள்ளது, இல்லையா? உன்னுடைய உச்சந்தலையில் உன்னுடைய கரத்தை வைத்து, "தேவனாகிய கர்த்தாவே, நான் இப்பொழுது சத்துருவைக் கடிந்து கொள்ளுகிறேன்" என்று கூறு. உன்னுடைய சொந்த உச்சந்தலையின் மேல் உன் கரத்தை வை. 84. ஓ, பிதாவே, நான் இப்பொழுது பிரதிநிதித்துவப்படுத்துகிற இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நான் ஜெபிக்கிறேன், நீர் அந்தப் பிசாசைக் கடிந்து கொண்டு, தேவ குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அந்த ஸ்திரீயிடமிருந்து அதை எடுத்துப் போடுவீராக. 85. எனது சகோதரியே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. தேவனிடத்தில் விசுவாசமுள்ளவளாயிரு, சந்தேகப்படாதே. 86. சற்று பொறுங்கள். கட்டிடம் முழுவதும் அசைவாடிக் கொண்டிருக்கிற ஏதோவொன்று இதோ வருகிறது. நான் பைத்தியக்காரன் என்று நீங்கள் நினைக்கலாம்; நான் பைத்தியக்காரன் அல்ல. இது பரிசுத்த ஆவியின் அபிஷேகமாயுள்ளது, நின்று கொண்டு, மக்கள் கூட்டத்தினரைப் பார்த்து, அவர்கள் என்ன செய்து கொண்டிருந்தனர் என்பதை கண்டு, அவர்களுடைய சிந்தனைகளை அறிந்து, அவர்கள் என்ன செய்து கொண்டிருந்தனர் என்பதையும் அதைப்போன்ற மற்ற காரியங்களையும் கண்டு கொண்ட அதே கர்த்தராகிய இயேசு தான் இது. இப்பொழுது இங்கேயிருப்பது அதே கர்த்தராகிய இயேசு தான். நான் இவ்விதமாக ஒருபோதும் அதைக் கண்டதேயில்லை, ஆனால் அது இருக்கிறது. 87. ஆமாம், அது மீண்டும் அசைவாடிக் கொண்டிருக்கிறதை நான் காண்கிறேன். அது ஒரு பெண்மணி, அவள்-அவள் பலவீனத்தால் அவதிப்படுகிறாள். அவள் சரியாக இங்கே பின்னால் உட்கார்ந்து கொண்டிருக்கிறாள். அவள் சற்று முன்பு என்னை நோக்கிப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் வந்திருக்கிறாள்... அவள் ஒரு மிஷனரி. அங்கே பின்னாலிருக்கும் சீமாட்டியே, உன்னுடைய காலூன்றி எழுந்து நில், நீ ஒரு மிஷனரி. நீ எங்கேயோ தண்ணீரைக் கடந்து வந்திருக்கிறாய். நான் தண்ணீர்களைக் காண்கிறேன், நீ ஆப்பிரிக்காவிலிருந்து வந்திருக்கிறாய், இல்லையா? அது உண்மை.... நீ சுகமானாய், வீட்டிற்குப் போ, தேவன் உன்னை சுகமாக்கியிருக்கிறார். அல்லேலூயா! 88. உங்கள் ஒவ்வொருவரையும் தேவன் சுகமாக்கி விட்டார். ஒவ்வொருவரும், உங்கள் காலூன்றி எழுந்து நில்லுங்கள். 89. சர்வவல்லமையுள்ள தேவனே, உம்முடைய குமாரனாகிய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், உமது ஆசீர்வாதங்களையும், வல்லமையையும் அனுப்பி, இந்தக் கூட்டத்தினரை சுகமாக்கு..... இயேசு கிறிஸ்துவின் நிமித்தமாக. 90. உங்களுடைய காலூன்றி எழுந்து நில்லுங்கள். முடமான ஒவ்வொருவரும், யாவரும், ஒவ்வொரு நபருமே சுகமடைந்து விட்டார்கள். உங்கள் கரங்களை உயர்த்தி, உயர்த்தி, தேவனுக்கு துதியை செலுத்துங்கள். உங்களுடைய சக்கர நாற்காலிகளை விட்டும், எல்லாவற்றையும் விட்டு எழும்புங்கள். சர்வ வல்லமையுள்ள தேவனுக்கு உங்கள் இருதயத்தில் இடங்கொடுத்து, நீங்கள் உங்கள் வழியில் போகையில் அவரை நம்புங்கள்.